சுவையான கொத்தமல்லிச் சட்னி

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி – 2 கட்டு
தேங்காய் – ஒரு மூடி
பச்சைமிளகாய் – 4
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
பொட்டுக்கடலை – ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கடுகு – ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி

செய்முறை

கொத்தமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காயுடன் பொட்டுக்கடலை, மிளகாய், புளி, பெருங்காயம் முதலியவற்றைச் சேர்த்து அரைக்கவும். பாதி அரைப்பட்டதும் அதனுடன் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்திருக்கும் மல்லித்தழைகளைச் சேர்த்து நன்கு மையாக அரைத்தெடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதில் சேர்க்கவும். சுவையான கொத்தமல்லிச் சட்னி தயார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *