நாட்டு மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க முடியாதது குறித்து சில நேரம் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க கூறியுள்ளார் . இதில் மக்களுக்கு சரியான முறையில் தடுப்பூசியை வழங்க முடியாது இருப்பதாகவும் முடிந்தவரை தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதுள்ள நிலைமை சிறந்ததாக இல்லை. எந்த நாட்டில் இருந்தாவது தடுப்பூசியை வரவழைத்து மக்களுக்கு செலுத்த வேண்டும். அரசியலுக்கு வந்ததற்கு பதிலாக கலைத்துறையில் இருந்திருக்கலாம். புத்தாண்டு சமயத்தில் மக்கள் விரும்பியவாறு களியாட்டங்களில் ஈடுபட இடமளித்து விட்டு அரசாங்கம் அமைதியாக இருந்தது , அதிலும் சிலர் கொரோனா இல்லாதது போல் நடந்துக்கொள்கின்றனர் எனவும் கீதா குமாரசிங்க விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *