வேப்ப எண்ணெய் மருத்துவ நன்மைகள்

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய உறுப்பு கல்லீரல் ஆகும். வேம்பம் பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு 5 கிராம் உலர்ந்த வேப்பம் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து வடிகட்டிச் குடித்து வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி போன்றவை நீங்கி கல்லீரல் நன்கு இயங்கும். வேப்ப எண்ணெய் காயங்களை விரைவில் ஆற்றும். மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளினால் …

Read More

மார்பக புற்றுநோயை தடுக்கும் வால்நட்

இப்போதைய காலகட்டத்தில் பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோயாக மார்பக புற்று நோய் இருந்து வருகிறது. வால்நட்ஸ் பருப்புகளை அடிக்கடி சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது. இப்பருப்புகளை தொடர்ந்து உண்ணும் ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. வால்நட் பருப்பில் இருக்கும் இயற்கையான ரசாயனங்கள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகபடுத்தி, உடலை பல வகையான நோய் தொற்றுகளிலிருந்து காக்கிறது. உடலில் இருக்கும் வைரஸ்களையும்  அழிக்கின்றது.

Read More

ராஜ்மா ஆரோக்கிய பயன்கள்

ராஜ்மா சாப்பிட்டு வருவதன் மூலம் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையும். இதன்மூலம் நம் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். இதில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்தானது பெருங்குடலில் தாக்கத்தை ஏற்படுத்தி உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து விடும். மூளையின் நரம்பு மண்டலங்கள் திறமையாக செயல்பட ‘வைட்டமின் கே’ அவசியம். ராஜ்மாவில் வைட்டமின் ‘கே’ அதிக அளவு நிறைந்துள்ளது. ராஜ்மாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்திறன் அதிகரித்து நினைவாற்றல் அதிகரிக்கும். ராஜ்மாவில் ‘வைட்டமின் B6’ அதிகமாக உள்ளது. இது நம் …

Read More

முள்ளங்கி கீரையின் நன்மைகள்

முள்ளங்கி கீரையானது இருதயத்திற்கு பலம் சேர்க்கும். மேலும் இதயம் பாதிக்கப்பட்டவர்கள்,  இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் வாரம் ஒரு முறையாவது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். முள்ளங்கிக் கீரையின் சாற்றை5அல்லது 6 டீஸ்பூன் அளவு எடுத்து, 3 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்துவிடும். சிறுநீர்ப்பை வீக்கம் இருந்தாலும் குணமாகும். சிறுநீர் கல்லடைப்பு, கரப்பான் என்ற தோல் வியாதிகளையும் குணமாக்கும். முள்ளங்கிக் கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும். வைட்டமின் பற்றாக்குறைகளும் …

Read More

ஆப்பிள் பழத்தின் நன்மைகள்

உடலில் தேக்கம் அடைந்திருக்கும் தேவையற்ற கொழுப்பை குறைக்க ஆப்பிள் பயன்படுகிறது. செரிமாண மண்டலம் சீராக இயங்க செய்கிறது. கால்சியம் குறைபாட்டை நீங்க செய்து எலும்புகளை பலப்படுத்துகிறது. நினைவாற்றலை அதிகப்படுத்தி மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது. வறட்டு இருமல் உள்ளவர்கள், தினசரி ஆப்பிள் பழம் சாப்பிட்டால் இருமல் தீரும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் ஆப்பிள் பழத்தை வேகவைத்து கொடுத்தால் வயிற்றுப்போக்கு  நின்று விடும்.  நரம்பு தளர்ச்சி நீங்கவும், நல்ல தூக்கம் வரவும் ஆப்பிள் பழம் பெரிதும் உதவுகிறது. தூக்கத்தில் எழுந்து நடக்கும் இயல்புடையவர்கள் குணமடைய, இரவில் இரண்டு ஆப்பிள் பழங்களை தண்ணீரில் …

Read More

மே 31, இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வுகள்

455 – உரோமைப் பேரரசர் பெட்ரோனியசு மாக்சிமசு உரோமை விட்டு வெளியேறுகையில் கும்பல் ஒன்றினால் கற்களால் எறிந்து கொல்லப்பட்டார். 1223 – செங்கிஸ் கானின் மங்கோலியப் படை சுபுதையின் தலைமையில் கிப்சாக்கியரை சமரில் தோற்கடித்தது. 1293 – சிங்காசாரி மன்னர் கேர்த்தனிகாரா யுவான்களுக்குத் திறை செலுத்த மறுத்ததால், மங்கோலியர்கள் சாவகம் மீது போர் தொடுத்தனர். இப்போரில் மங்கோலியர் தோல்வியுற்றனர்.[1][2] 1669 – சாமுவேல் பெப்பீசு கடைசிப் பதிவைத் தனது நாட்குறிப்பில் எழுதினார். 1790 – ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பதிப்புரிமைச் சட்டத்தை அமுலாக்கியது. 1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது. 1889 – அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் ஜோன்ஸ்டவுன் நகரில் அணைக்கட்டு ஒன்று உடைந்ததில் 2,200 பேர் உயிரிழந்தனர்.

Read More

சுவையான பாகற்காய் குழம்பு

தேவையான பொருட்கள் பாகற்காய் – 2 வேக வைத்த பருப்பு – அரை கப் புளி – சிறிய எலுமிச்சை அளவு மிளகாய் வற்றல் – 2 கடலைப்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி தனியா – 1 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி கடுகு – கால் தேக்கரண்டி வெந்தயம் – கால் தேக்கரண்டி தேங்காய் – 3 சில் வெல்லம் – சிறிது கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை மேலே குறிப்பிட்டுள்ள தேவையானவைகளை தயாராக எடுத்துக் …

Read More

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற நாள் மே 31, 1942

1902 – இரண்டாம் பூவர் போர் முடிவுற்றது. தென்னாபிரிக்கா பிரித்தானியாவின் முழுமையான ஆட்சியின் கீழ் வந்தது. 1910 – தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. 1911 – டைட்டானிக் கப்பல் வட அயர்லாந்து, பெல்பாஸ்ட்டில் வெள்ளோட்டம் விடப்பட்டது. 1911 – மெக்சிக்கோ புரட்சி: மெக்சிக்கோவின் அரசுத்தலைவர் பொர்பீரியோ தீயாசு நாட்டை விட்டு வெளியேறினார். 1921 – அமெரிக்காவில் ஓக்லஹோமா, துல்சா என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களின் போது 39 கறுப்பினத்தவர் கொல்லப்பட்டனர். 1935 – பாக்கித்தானின் குவெட்டா நகரில் 7.7 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 40,000 பேர் உயிரிழந்தனர். 1941 – ஆங்கில-ஈராக்கியப் போர்: ஐக்கிய இராச்சியம் ஈராக்கை மீளக் கைப்பற்றியது. 1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆத்திரேலியாவின் சிட்னி நகரைத் தாக்கின

Read More

மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்ட நாள் மே 31, 1962

1961 – தென்னாபிரிக்கா பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகியது. தென்னாபிரிக்கக் குடியரசு அமைக்கப்பட்டது. 1962 – மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. 1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர். 50,000 பேர் காயமடைந்தனர். 1973 – கெமர் ரூச் மீதான குண்டுத் தாக்குதல்களுக்கான அமெரிக்க நிதியுதவிகளைக் குறைக்க அமெரிக்க மேலவை வாக்களித்தது. 1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர். 1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

Read More

ஈழபத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் கொல்லப்பட்ட நாள் மே 31, 2004

1985 – வட அமெரிக்காவில் ஒகையோ, பென்சில்வேனியா, நியூயார்க், ஒன்றாரியோ ஆகிய இடங்களில் வீசிய சுழற்காற்றினால் 76 பேர் உயிரிழந்தனர். 1991 – அங்கோலாவில் பல-கட்சி மக்களாட்சி முறைக்கான உடன்பாடு ஐநாவின் ஆதரவில் எட்டப்பட்டது. 1997 – கனடாவில் நியூ பிரன்ஸ்விக்கையும் பிரின்ஸ் எட்வர்ட் தீவையும் இணைக்கும் கூட்டமைப்புப் பாலம் திறக்கப்பட்டது. 2004 – ஈழப்போர்: ஈழத்துப் பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2005 – ஈழப்போர்: இலங்கையின் புலனாய்வுத்துறை உயர் அதிகாரி மேஐர் நிசாம் முத்தாலிப் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார். 2013 – சிறுகோள் “1998 கியூ.ஈ.2” அடுத்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு பூமிக்கு மிகக் கிட்டவாக வந்தது. 2017 – காபூல் நகரில் மேற்கொள்ளப்பட்ட வாகனக் குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டனர், 463 பேர் காயமடைந்தனர்.

Read More