ஐ.பி.எல். 2021 : சென்னை அணியை பந்தாடிய தவான் – பிரித்வி ஷா

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரின் இரண்டாவது போட்டி  மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் –  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே தொடங்கியது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி 18.4 ஓவரில் 3 விக்கெட் இழந்து 190 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *