ஐ.பி.எல். 2021 : சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐபிஎல் போட்டியில் சாதனை படைத்த ஹர்ஷல் பட்டேல் 

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தொடக்க லீக் ஆட்டம் ரசிகர்கள் இன்றி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் களம் கண்டன. டாஸ் வென்ற பெங்களூரு அணி ம்யுதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 159/9 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல்  அதிரடியாக பந்து வீசினார். 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.  இந்த சாதனைகளோடு நிற்காமல் மேலும் ஒரு சாதனை உள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரர் ஐபிஎல்-ல் ஒரே போட்டியில் 5 விக்கெட்களை எடுப்பது இது முதல் முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *