ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் : 131 ரன்களில் சுருண்ட ஆப்கானிஸ்தான்

அபுதாபி:

ஆப்கானிஸ்தான் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த  ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்சில் 131 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சசாய் 37 ரன்னும், சட்ரன் 31 ரன்னும் எடுத்தனர். ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 4 விக்கெட்டும், நிவாசி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணியில், முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர். கேப்டன் சீன் வில்லியம்சும், சிக்கந்தர் ராசாவும் ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடினர்.  சிக்கந்தர் ராசா 43 ரன்னில் அவுட்டானார். முதல் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. சீன் வில்லியம்ஸ் அரை சதமடித்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். ஆப்கானிஸ்தான் சார்பில் அமீர் ஹம்சா 4 விக்கெட் வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *