போபால்,
மத்திய பிரதேச மாநிலம், காண்ட்வா தொகுதி பா.ஜ.க. எம்.பி. நந்தகுமார் சிங் சவுகான் (68). கடந்த சில நாட்ளுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு டெல்லி மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை மோசமானதால், கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நந்தகுமார் சிங் சவுகான் நேற்று காலையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.