‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் : இந்தியன் வங்கி, செயின்ட் ஜோசப்ஸ் அணிகள் வெற்றி

சென்னை,

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் டாக்டர் ரேலா மருத்துவ மையம் மற்றும் ஆச்சி குரூப் நிறுவனங்கள் ஆதரவுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில், 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி அணி 25-19, 17-25, 22-25, 25-22, 15-11 என்ற செட் கணக்கில் சுங்க இலாகாவை வீழ்த்தியது.

தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 25-16, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பனிமலர் அணியை வீழ்த்தியது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் தமிழ்நாடு போலீஸ்-சுங்க இலாகா (மாலை 4.30 மணி), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி-பனிமலர் (மாலை 5.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *