ஐசிசி விருது பட்டியலில் இந்திய வீரர் அஸ்வின்

துபாய்,

நடப்பு ஆண்டு மதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் வீரர்களுக்கு மாதந்தோறும் விருதுகள் வழங்கப்படும் ஏன்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்தது. அதன்படி கடந்த மாதத்திற்கான  விருதை இளம் வீரர் ரிஷப் பண்ட் பெற்றுக்கொண்ட நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (இந்தியா), ஜோ ரூட் (இங்கிலாந்து), கைல் மேயர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோரை இறுதி செய்து ஐ.சி.சி. நேற்று அறிவித்தது.

பிப்ரவரி மாதத்தில் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பதுடன், சதம் உள்பட 176 ரன்களும் எடுத்து பிரமாதப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கடந்த மாதத்தில் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்டில் ஆடி இரட்டை சதம் உள்பட 333 ரன்கள் சேர்த்துள்ளார். அத்துடன் 6 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகி 2-வது இன்னிங்சில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்தார்.

இவர்களில் இருந்து சிறந்த வீரரை ஐ.சி.சி.யின் வாக்கு அகாடமி மற்றும் ரசிகர்கள் இணையம் வழியாக வாக்களித்து தேர்வு செய்வார்கள். சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் டாமி பீமோன்ட், நாட் ஸ்சிவர் (இங்கிலாந்து), புரூக் ஹாலிடே (நியூசிலாந்து) ஆகியோர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *