கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட ரவிசாஸ்திரி

ஆமதாபாத்,

இந்தியாவில் இதுவரை முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி நேற்று முன்தினம் முதல் 2-வது கட்டமாக 60 வயதை எட்டிய அனைவருக்கும், இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான 58 வயது ரவிசாஸ்திரி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரவிசாஸ்திரி பதிவிட்ட கருத்தில், ‘கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவை வலிமையானதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு இருக்கும் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *