ஆஸ்திரேலியாவில் சமூக வலைத்தளங்கள் செய்திக்கு பணம் செலுத்த புதிய சட்டம்

கான்பெர்ரா:

ஆஸ்திரேலியாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியிடுவதற்கு பத்திரிகை நிறுவனங்களுக்கு பணம் தர வகை செய்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக் நிறுவனம், தனது வலைத்தளத்தில் செய்திகளை வெளியிட கடந்த வாரம் திடீரென தடை விதித்தது. பேஸ்புக்கின் இந்த செயலுக்கு அந்த நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரீசன் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசுக்கும், பேஸ்புக் நிறுவனத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து செய்தி ஊடக பேரம் பேசும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள பத்திரிகை வெளியீட்டாளர்களுக்கு லாபகரமான தொகையை தருவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *