தா.பாண்டியன் மரணம் – முதல்வர் பழனிசாமி இரங்கல்

சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- மூத்த அரசியல் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினருமான தமிழ் மாநில செயலாளருமான சகோதரர் தா. பாண்டியன், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி, இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

தா. பாண்டியன் பள்ளிப் பருவத்திலேயே சமூக, அரசியல் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்டவர். கல்லூரியில் மாணவராக இருக்கும் போதே, தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, மக்கள் பணியாற்றியவர். சகோதரர் தா. பாண்டியனின் மறைவு தமிழ்நாட்டிற்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *