வடகாடு அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

வடகாடு:

வடகாடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 27). இவர் நேற்று முன்தினம் நெடுவாசலில் இருந்து பேராவூரணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஆவணம் கைகாட்டி அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் எதிர்பாராத வகையில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வடகாடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து திருக்கோர்ணம் பகுதியை சேர்ந்த தேவதாஸ் (28) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *