விமான பணிபெண்ணாக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் பெருமளவு ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.
சமீபத்தில் வெளியான தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை பெற்றிருக்கிறார். இப்படியிருக்கும் நிலையில் தற்போது முதன் முறையாக நடிகர் அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியானது . இவர் அடிக்கடி சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரவசம் தருவார். இதனிடையே , சசிகுமார் நடித்துள்ள பகைவனுக்கு அருள்வாய் படத்தில் இவர் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் முழுதும் நிறைவடைந்த நிலையில், படகுழுவினர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாணி போஜன் ஷேர் செய்திருக்கிறார் . இவற்றை பார்த்த ரசிகர்கள், ” நம்ம மைண்ட் அங்குட்டுல போகுது” என்று பலான கமெண்ட் செய்து வருகிறார்கள் .
