முக்கிய பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நபர்

இலங்கையில் வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் நபர் ஒருவரின் பிணம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அவரது வீட்டின் முற்றத்திலேயே நேற்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதில் உயிரிழந்த நபர் நேற்று முன்தினம் இரவு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் பிணமாக கிடப்பதை கவனித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக வவுனியா பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதான ஒரு குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த மர்மமான மரணம் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தி கொண்டு வருகிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *