ஊட்டி:
கொரோனா தொற்று குறைவு மற்றும் தளர்வுகள் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட எல்லைகளில் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியது.அதன்படி கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இ-பதிவு மற்றும் கொரோனா இல்லை என்ற சான்றுடன் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அறிவித்தார்.