வெளிநாட்டு பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சம்பவத்தில் ஒருவர் கைது

தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வருகை தந்ததையும் வாகன பேரணியையும் பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முகநூல் நேரலை காட்சிக்காக இவற்றை பதிவு செய்ததாக கூறப்படுகின்றது. இந்த நபர் பொரளை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தனியார் துறையில் இயந்திர தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது நடத்தை பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *