முக்கிய இடத்தில் இடை நிறுத்தப்பட்டிருந்த நடவடிக்கை மீண்டும் தொடங்கியது

இலங்கையில் அம்பாறை பிராந்தியத்தில் சிறப்பு போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நேற்று காலை முதல் மதியம் வரை இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் எடுக்கப்பட்டுள்ளன. இந்த திடீர் சோதனையில் ஓட்டுனர் அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு அபராதப்பணம் விதிக்கப்பட்டு சாலை ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் காவல்துறையினரால் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *