தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் மே மாதம் 23-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வந்தது. இந்நிலையில் இன்று ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தபோது, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து தேர்தல் நடத்தப்படும். முன்கள பணியாளர்கள் பங்கு முக்கியமானது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன என்று கூறினார்.
