மார்ச் 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் – மத்திய அரசு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்பின் பொருளாதார முன்னேற்றம், மக்கள் வாழ்வாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிப்ரவரி 28-ந்தேதி வரை அமலில் இருக்கிறது. இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மார்ச் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கெரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்த போதிலும், கண்காணிப்பு, கட்டுப்பாடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *