மேற்கு வங்காளத்தில் தேர்தல் வர இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதற்கு முன்பே திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. இரு கட்சிகளும் ஒருவர்மீது ஒருவர் கடுமையான வகையில் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று பா.ஜனதாவின் மூத்த தலைவரும், பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் பலுர்காட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது கூறுகையில், மேற்கு வங்காளத்தில் எங்களுடைய பேரணியில் மிகப்பெரிய அளவில் மக்கள் கூடுவது, மம்தா பானர்ஜி அரசை வெளியேற்ற மக்கள் முடிவு எடுத்துள்ளனர் என்பதை காட்டுகிறது. அதேவேளையில் பா.ஜனதாவை ஆட்சிக்கு கொண்டுவருவதை காட்டுகிறது என்று கூறினார்.
