விருந்து நிகழ்ச்சியின்போது நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட முக்கிய பிரமுகர்கள்

தற்போது இலங்கைக்கு வருகை தந்திருந்த பாகிஸ்தான் பிரதமருக்கான விருந்து நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். மேலும் ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவத்தின் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட அதே நாளில் அவர்களின் சந்திப்பு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக மாறியுள்ளது . மேலும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு மிகவும் அரிதான நிகழ்வாகவும் காணப்படுகிறது . அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் ஒரே மேசையில் பக்கத்து இருக்கைகளில் இவர்கள் அமர்ந்திருந்தனர். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் இருவரும் இந்த விருந்தில் பங்கேற்று கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *