விக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…?

கொட்டாவி : மிகவும் சலிப்பு தட்டிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல் இப்படிச் செய்கிறது என்பதில் உண்மையில்லை. மூளை அதிகம் சூடாகும்போது கொட்டாவி வரும்.
விக்கல் : நீங்கள் மிக வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதை உணர்த்தத்தான் உடல் விக்கலை வெளிப்படுத்துகிறது. அதேபோல அளவிற்கு அதிகமாக சாப்பிடுதல், மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற காரணங்களாலும், விக்கல் ஏற்படும்.
திடீர் விழிப்பு : நன்றாக தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள். திடீரென்று அதிர்ச்சி அடைந்த மாதிரி சத்தத்தை எழுப்பியபடி எழுகிறீர்கள். இப்படி உங்களுக்கு நடந்திருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி! மூளை, நம்மை மரணத்தில் இருந்து காப்பாற்றத்தான் இப்படிச் செய்திருக்கிறது என்கிறது, ஆராய்ச்சி முடிவுகள். நாம் தூங்கும்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு போன்றவை குறைந்திருக்கும்.
விரல்களில் தோல் சுருக்கம் : தண்ணீரில் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கையை நனைத்து வைத்துவிட்டு எடுத்துப் பார்த்தால், விரல்களில் உள்ள தோல் சுருங்கிப்போயிருக்கும். ஆறு, ஏரி அல்லது நீச்சல் குளத்தில் நீண்ட நேரம் ஆட்டம் போட்டுவிட்டு வெளியே வரும்போது, இந்தச் சுருக்கங்களை நீங்கள் கவனித்து இருக்கலாம்.
சோம்பல் முறித்தல் : இரவில் நாம் தூங்கியவுடன் நமது தசைகள் ஓய்வு எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். காலையில் சோம்பல் முறிப்பதன் மூலம் உடல் இந்த தசைகளையும் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுகிறது. சோர்வாக இருக்கும்போதும் நாம் சோம்பல் முறிப்போம். இதனால் தசைகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து, அவை சுறுசுறுப்பாகும்.
தும்மல் : பாக்டீரியா, அலர்ஜியை ஏற்படுத்தும் பொருட்கள், தூசுக்கள் போன்றவை மூக்குக்குள் செல்லும்போது நம்மை அறியாமலேயே தும்மல் வந்துவிடும். பாதிப்பு ஏற்படுத்தும் பொருட்களை ஆரம்பத்திலேயே ஒழித்துக்கட்டிவிட உடல் செய்யும் நல்ல நடவடிக்கை இது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *