கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு

இரண்டாவது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டி, ஜம்மு காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் இன்று தொடங்கியது. துவக்க விழாவில் பிரதமர் மோடி காணொளி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றியபோது, விளையாட்டு என்பது ஒரு பொழுதுபோக்கு அல்லது ‘டைம் பாஸ்’ மட்டுமல்ல. விளையாட்டுகளில், நாம், குழுவாக இணைந்து செயல்படும் உணர்வைக் கற்றுக்கொள்கிறோம், தோல்விகளில் புதிய வழிகளைத் தேடுகிறோம், மீண்டும் வெற்றிகளை பெற கற்றுக்கொள்கிறோம். விளையாட்டானது, வீரர்களின் வாழ்க்கையையும் வாழ்க்கை முறையையும் சிறப்பாக்குகிறது. இது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது என்று கூறினார். 5 நாட்கள் நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில், 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 1200 தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஸ்னோஷூ ரேஸ், ஐஸ் ஸ்கேட்டிங், ஐஸ் ஹாக்கி, பனிச்சறுக்கு, ஸ்னோபோர்டிங், பனிமலையேறுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *