தாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்

தாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக, வித்தியாசமாக அனுபவிக்க வேண்டிய ஒரு சிறந்த கலையாக அதைப் பார்க்கிறார்கள். சடங்காக நினைக்கும் முதல் வகை ஜோடியினர் பெரும்பாலும் உடல் அந்தரங்க சுத்தத்தில் பெரிதாக அக்கறை செலுத்துவதில்லை. கலையாக கருதும் இரண்டாவது வகையினரே பெரும்பாலும் சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தாம்பத்திதியத்தை முழுமையாக கொண்டாடுவதற்கு தம்பதிகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயாராக வேண்டியது மிக மிக அவசியம். உடல் மிகுந்த சுத்தமாக இருக்கவேண்டும். அதோடு சுற்றுப்புறமும் சுத்தமாக இருக்கவேண்டும். மனித உடலை அற்புதமாக மூடி அதற்கு சிறந்த அழகையும், பாதுகாப்பையும் தருவது இந்த சருமம் தான். சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் வாழும் கூடாரம் போல் உடல் மாறி விடும். அப்போது நாற்றம் வீசுதல், சொறி ஏற்படுதல் போன்றவை உருவாகும். எப்போதாவது உடலை சுத்தம் செய்வதைவிட, குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சுத்தம் செய்தால் தான் நாம் சுகாதாரமாக வைத்துக்கொள்ள முடியும். ஆண், பெண் இருவரும் ரோமம் நிறைந்த பகுதிகளில், ரோமம் வளரக்கூடிய பகுதிகளில் சோப்பை தேய்த்து நன்றாக குளிக்கவேண்டும். மணக்கும் தன்மைகொண்ட ஏதாவது திரவம் ஒன்றை சேர்த்து மிதமான சுடுநீரில் குளிப்பது நல்லது. அக்குள், தொடை இடுக்கு, காதுகளின் பின்பாகம், தொப்புள், மார்பக இடுக்குகள், பிறப்பு உறுப்பு பகுதி, பின்பகுதி போன்றவைகளில் இருக்கும் அழுக்கு நீங்கும் அளவுக்கு குளிக்கவேண்டும். நீங்கள் உறவுக்கு தயாராக இருந்தால், உறவு வைத்துக்கொள்ளும் நேரத்திற்கு சற்று முன்பு இரண்டாவது குளியலை வைத்துக்கொள்ளலாம். இது உறவுக்கு மட்டுமல்ல, உறக்கத்திற்கும் ஏற்றத

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *