சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்குமா ?

சண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10 மடங்கு அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம். பிரச்சனைகளை அப்படியே விட்டுவிட்டு பேசாமல் இருப்பது தான் காதலர்கள் செய்யும் பெரிய தவறு. அப்போதைக்கு சண்டை வேண்டாம் எனத் தள்ளிப்போடுவது பிரச்சனையின் வீரியத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. காதலில் ஒவ்வொரு சூழலிலும் நமது உணர்வுகளின் மாறுபாடுதல்களை நாம் புரிந்துகொள்ளாமல் நமது துணை மீது பழிபோடுவது தான் காதலில் செய்யும் மிகப்பெரும் தவறு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளை மட்டுமின்றி சில பழக்கவழக்கங்களும் ஜோடிகளுக்குள் சச்சரவுகளைக் கொண்டு வருமாம். காதல் உணர்வு குறைவாக உள்ளவர்களிடம், மனஅழுத்த உணர்வு அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்திற்கு உள்ளானவர்கள், தங்கள் மீதே காதல் இல்லாதவர்களாகவும், மற்றவர்கள் மீது பாசம் காட்ட தயங்குபவர்களாகவும் இருப்பார்கள். அவர்களிடம் சுயநலம் அதிகமாக இருக்கும். அவர்கள் காதலிக்கப்படாததற்கு அதுவே காரணமாக இருக்கிறதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *