திருமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருமங்கலம்: திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராமன் மனைவி சுமதி (வயது 58). இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு கள்ளிக்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த சுமதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து சுமதி அளித்த புகாரின் பேரில் …

Read More

அதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப் பதான். அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார். இவர் தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Read More

அதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை பேச்சுவார்த்தை : அன்புமணி ராமதாஸ்

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பா.ம.க. உடன் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் பேசினர். அப்போது வன்னியர் இடஒதுக்கீட்டில் டாக்டர் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். இதனால் கூட்டணி உறுதிப்படுத்தாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று மதியம் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா சட்டசபையில் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து நாளை அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Read More

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்து – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

திருச்சி: புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார். தனியார் ஆஸ்பத்திரி மகப்பேறு நிபுணர் டாக்டர் புவனேஸ்வரி கூறும்போது, மலட்டு தன்மைக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக அமையாது என பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. அதே நேரம் கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி …

Read More

அலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Read More

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்

கன்னியாகுமரி: தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மாலை அறிவித்தார். அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவையடுத்து காலியாக உள்ள கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார். …

Read More

தமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 50 ஆயிரத்து 577 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 4,046 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 483 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 043 ஆக உயர்ந்துள்ளது. ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 5 …

Read More

தென்காசியில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,543-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு இதுவரை 8,335 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 48 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 159 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

Read More

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 4 பேர் கொரோனா பாதிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 2 பேருக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,907-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10,795 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு 108 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More

டெல்லியில் புதிதாக 256 பேருக்கு கொரோனா பாதிப்பு

டெல்லியில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 256 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 9-ந்தேதி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. அதன்பின் 13-ந்தேதியும், 17-ந்தேதியும் உயிர்ச்சேதம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை 6,38,849 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது.

Read More