மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியாக நாளை இந்தியா – இங்கிலாந்து இடையே போட்டி

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது. சீரமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டிகள் நாளை தொடங்குகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த ஸ்டேடியத்தில் தலா 25 பேர் வசதியாக அமரக்கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ்களும் உள்ளன. இது நவீன வசதிகளை கொண்டது. 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன. பிரமாண்ட விளக்கு கம்பங்களுக்கு பதிலாக மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்.இ.டி. பிளாட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பிரமாண்ட உணவகம், மினி 3டி திரையரங்கம், மிகப்பெரிய நீச்சல்குளம், ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *