விவசாயிகள் போராட்டம் தொடர்பான டூல்கிட்டை பகிர்ந்ததாக பெங்களூருவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீசார் கைது செய்தனர். 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். அதன்பின்னர் நேற்று மீண்டும் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். ஒரு நாள் அவரை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில், திஷா ரவி தரப்பில் பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திஷா ரவி மீதான குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம் உள்ளது? ஜனவரி 26ல் நடந்த வன்முறைக்கும் டூல்கிட்டுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் ஏதாவது உள்ளதா? என கேள்வி எழுப்பியது. இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். டூல்கிட் வழக்கில் திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். போலீஸ் காவல் முடிவடைந்ததால் திஷா ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
