‘மாஸ்டர்’ படம் போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் – பிரபல இயக்குனர்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். விஜய் நடித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலையும் வாரிக் குவித்தது. இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு சமீபத்திய பேட்டியில், தெற்கில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல், பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும். அப்படி வந்தால் தான் இங்கும் திரையரங்குக்கு பொதுமக்கள் வருவார்கள் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *