அமேசான் இந்தியா வலைதளத்தில் Fab Phones Fest எனும் பெயரில் சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடி மட்டுமின்றி வட்டியில்லா மாத தவணை வசதி, எக்சேன்ஜ் சலுகை, உடனடி தள்ளுபடி மற்றும் வங்கி சலுகைகளும் வழங்கப்படுகின்றன. சிறப்பு விற்பனையில் சாம்சங், சியோமி, ஒன்பிளஸ், விவோ, ரியல்மி மற்றும் பல்வேறு இதர நிறுவன மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. புதிய மாடல்கள் மட்டுமின்றி புதுப்பிக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களுக்கு அதிகபட்சம் 65 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 11 பரோ ரூ. 82,900 முதல் துவங்குகிறது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ மாடல் ரூ. 35,990 துவக்க விலையில் கிடைக்கிறது. இதேபோன்று எம்ஐ 10டி ப்ரோ 5ஜி, சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா, எல்ஜி விங் போன்ற மாடல்களும் சிறப்பு விலையில் கிடைக்கின்றன.
