100-வது டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறும் இஷாந்த் சர்மா

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இஷாந்த் சர்மா. 32 வயதான இவர் 99 டெஸ்டில் விளையாடி உள்ளார். 302 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டி இஷாந்த் சர்மாவுக்கு 100-வது போட்டி ஆகும். அதுவும் உலகின் மிகப்பெரிய மைதானத்தில் அவர் தனது 100-வது டெஸ்டில் விளையாடுகிறார். இந்த மைல் கல்லை எட்டும் 11-வது இந்திய வீரர் இஷாந்த் சர்மா ஆவார். பந்து வீச்சாளர்களில் 4-வது வீரர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும், வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது வீரராக இடம் பிடிக்கிறார். கபில் தேவ்-க்குப்பிறகு 100 டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர் இவர்தான். தற்போதைய சூழ்நிலையில் இஷாந்த் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அரிதான செயலாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இஷாந்த் ஷர்மா கூறுகையில், என்னை அதிகம் புரிந்து கொண்ட கேப்டன் யார்? என்று குறிப்பிட்டு சொல்வது கடினமானதாகும். எனக்கு கேப்டனாக இருந்த எல்லோருமே என்னை நன்கு புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். கேப்டன் நம்மை புரிந்து கொள்வதை விட கேப்டன் என்ன நினைக்கிறார், நம்மிடம் இருந்து எத்தகைய செயல்பாட்டை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து செயல்பட வேண்டியது எப்பொழுதும் மிகவும் முக்கியமானதாகும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *