பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிப்பு

மத்திய அரசின் கலால் வரி உயர்வு, மாநில அரசின் மதிப்பு கூட்டு வரி அதிகரிப்பு ஆகியவற்றால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை மிக மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகளின் வாடகை கட்டணம் 20 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. இதன்காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *