கர்நாடக கல்குவாரி வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம் ஹிரங்காவல்லியில் உள்ள கற்குவாரியில் நேற்று இரவு பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், குவாரி விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *