மேகதாது அணை கட்டும் திட்டத்தை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது – குமாரசாமி

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி காவிரி, வைகை, குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசே நிதி உதவி அளித்திருக்கும் விவகாரம் பற்றி கர்நாடக அரசுக்கு தெரியாமல் இருந்தது ஆச்சரியமாக இருக்கிறது. நான் முதல்-மந்திரியாக இருந்த போது கொண்டு வரப்பட்ட மேகதாதுவில் புதிதாக அணைகட்டும் திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி கொள்ள முடியாத நிலை தமிழகத்திற்கு ஏற்படும். இதனால் தான், மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது. தற்போது காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி தமிழக அரசு 342 ஏரிகள், 42,170 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மற்றொரு விஷயமும் பகிரங்கமாகி உள்ளது. தமிழ்நாட்டில் நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கர்நாடகத்தில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *