பெங்களூருவில் பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் அளித்த பேட்டியில், டெல்லியில் கடந்த மாதம் (ஜனவரி) 26-ந் தேதி குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் போது விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு கூறி இருக்கிறார். டெல்லியில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு பின்னணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் பங்கு இருப்பது பற்றி நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். பா.ஜனதாவுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே தவறான கருத்தை மக்களிடம் தெரிவித்துள்ளார். குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் பெரிய அளவில் வன்முறை நடைபெற வேண்டும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்தது. அதன்படியே வன்முறை நடந்திருந்தது. அதுபற்றி பேச மல்லிகார்ஜுன கார்கே மறந்து விட்டார் என்று கூறினார்.
