ஃப்ரூட் லாலிபாப் சாலட் செய்வது எப்படி ?

ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விட வேண்டும். மேல்புறம், கீழ்புறம் நறுக்க வேண்டும். பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால் இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவ வேண்டும். லாலிபாப் குச்சியில் முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாற வேண்டும். விரும்பினால் கருப்பு திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம். அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *