மயக்கம் வருவதற்கான காரணமும்…அதன் வகைகளும்

உடல் சார்ந்த மயக்கத்தில் குறு மயக்கம், நெடு மயக்கம் என இரு வகை உண்டு. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், மக்கள் அதிகமாக நடமாடும் பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் திடீரென்று யாராவது மயக்கமடைந்து தரையில் விழுவதை பார்த்திருப்பீர்கள். இதை குறு மயக்கம் என்கிறோம். இதற்கு காரணம் மூளைக்கு ரத்தம் செல்ல தடை ஏற்படுவது தான். ஏதாவது ஒரு காரணத்தால் ரத்த ஓட்டம் சில நிமிடங்களுக்கு இடுப்புக்குக் கீழே நின்று விடுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இதனால் மயக்கம் ஏற்படுகிறது. மயங்கித் தரையில் விழுந்ததும் ரத்த ஓட்டம் சரியாகி விடுகிறது. இதனால் மயக்கமும் சரியாகிவிடுகிறது. காலை உணவைச் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவது முதல் காரணம். இதனைப் பசி மயக்கம் என்று கூறுகிறோம். இரவு தூக்கம் தேவையான அளவுக்கு இல்லாதது அடுத்த காரணம். ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பது மூன்றாவது காரணம். மனக் கவலை, இழப்பு, சோகம், திகில், அதிர்ச்சி போன்ற உளவியல் காரணங்களால் வயதில் பெரியவர்களுக்கு குறு மயக்கம் ஏற்படுகிறது. நின்ற மற்றும் உட்கார்ந்த நிலையிலோ இருக்கும் ஒருவர் திடீரென்று நினைவிழந்து, மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார். மயக்கத்திலிருந்து விடுபட்டதும் சில நிமிடங்களுக்கு கைகால்களில் நடுக்கமும், தசைத்துடிப்பும் ஏற்படும். சிலருக்குக் குறு மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு படபடப்பு ஏற்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *