இந்தியா-சீனா நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வரவேற்கிறோம் – அமெரிக்கா

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியதால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 15-ம் தேதி இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீனா தரப்பில் சுமார் 35 பேரும் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இருதரப்பும் படைகளை குவித்தன. எனவே இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது. இருநாட்டு லெப்டினன்ட் ஜெனரல் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டது. எல்லையில் பதற்றத்துக்குரிய பகுதிகளில் இருந்து இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பு அதிகாரி நெட் பிரைஸ் கூறுகையில், எல்லை பகுதியில் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் இந்தியா மற்றும் சீனா நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளை நாங்கள் வரவேற்கிறோம். படைகள் வாபஸ் பற்றிய அறிவிப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அமைதியான தீர்வு காணப்படுவதற்கான பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டு வருவதனை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவோம். கொரோனா பெருந்தொற்று தொடக்க காலத்தில் இருந்தே இந்திய மருந்து தொழிற்சாலையுடன் இணைந்து அமெரிக்க மருந்து தொழிற்சாலை பணியாற்றி வருகிறது என்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *