கொரோனா தடுப்பூசி : தமிழகத்தில் 3.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 34-வது நாளாக நேற்று 687 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 ஆயிரத்து 754 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 85 ஆயிரத்து 366 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 706 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 7 ஆயிரத்து 660 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *