முன்னணி கதாநாயகியாக உயர்ந்த கீர்த்தி சுரேஷ், தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சில தினங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேசும் இசையமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாக இணைய தளங்களில் கிசுகிசுக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த கிசுகிசுவை கீர்த்தியின் தந்தை மறுத்திருந்தார். இந்நிலையில் படப்பிடிப்புக்காக வீட்டை விட்டு துபாயில் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனது குடும்பத்தை மிஸ் செய்வதாக தெரிகிறது. அதனால் தனது அம்மாவுடன் இருக்கும் ஒரு அழகிய படத்தைப் பகிர்ந்துள்ளார். தனது அம்மா மேனகா மருதாணி வைத்துவிடும் படத்தைப் பகிர்ந்துள்ள கீர்த்தி, ‘தூய்மையான வடிவத்தில் காதல்’ எனத் தலைப்பிட்டுள்ளார். இந்த படம் ஊரடங்கில் எடுக்கப்பட்டது. இந்தப் படத்திற்கு கீர்த்தியின் ரசிகர்கள் லைக்ஸ் மழையை பொழிந்து வருகிறார்கள்.
