கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேராவில் நடக்கிறது. கடைசி இரண்டு போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா தொடரின்போது காயம் அடைந்த உமேஷ் யாதவ் அணியில் இடம்பிடித்தார். 3-வது போட்டிக்குள் உடற்தகுதியை நிரூபித்தால் 3-வது போட்டிக்கான அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று உமேஷ் யாதவ் உடற்தகுதியை நிரூபிக்க, இந்திய அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *