சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்கள்

சிவப்பு மிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. ஒற்றைத்தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது, சளிக்கான அறிகுறிகளைக் குறைகிறது, மேலும் உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தை விட அதிக அளவு வைட்டமின் சி சத்தை சிவப்பு மிளகாய் கொடுக்கிறது. சிவப்பு மிளகாய் 3க்கு 1 என்ற அளவில் நோயெதிர்ப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளை வழங்கி ஆரஞ்சு பழத்தை வெற்றி கொள்கிறது. அரை கப் நறுக்கிய சிவப்பு மிளகாயில் 107.8 மிகி அளவு வைட்டமின் சி சத்து உள்ளது. சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி சத்து உயர்ந்த அளவு உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது. மேலும் இதய நோய் போன்ற நாட்பட்ட உடல் பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மிளகாய்க்கு கார தன்மையை வழங்கும் காப்சைசின் என்பது ஒரு ஆன்டிஆக்சிடெண்ட் தாவர கூறாகும். குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. புற்றுநோய் அணுக்களுடன் தொடர்புடைய சில மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவற்றை வளரவிடாமல் தடுப்பதையும் காப்சைசின் மாற்றக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், சில ஆய்வுகள் மிளகாய் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதால், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுபொருள் சிவப்பு மிளகாய். இவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *