தற்போது மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லகிரு குமாரவுக்கு கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் கொரோனா தொற்றுக்கு உள்ளான இரண்டாவது வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது . முன்னதாகவே லகிரு திரிமன்னே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தற்சமயம் பூரண குணமடைந்து வருகிறார். லகிரு குமார கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கும் நிலையில் அவருக்குப் பதிலாக சுரங்க லக்மால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
