இலங்கையில் நான்கு கோழிகளைத் திருடிய ராணுவ வீரர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ராணுவ வீரர் போத்தல பகுதியைச் சேர்ந்த அண்டுரட்வில பகுதியில் வசிப்பவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் சுமார் 2,500 ரூபாய் மதிப்புள்ள நான்கு கோழிகளை திருடியதாக போத்தலவின் வல்பிட்ட பகுதியில் வசிப்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
