இப்போது கடாய் காளான் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் காளானை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு மிளகாயை கிள்ளிக் கொள்ளவும். அதையடுத்து வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். இதன்பிறகு வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் காளான் போட்டு வதக்கி விடவும். இதையடுத்து மிளகாய்த்தூள், உப்புத்தூள் போட்டுக் கிளறவும். இப்போது காளான் நன்றாக வதக்கியதும் சீரகத்தூள் போட்டு 5 நிமிடங்கள் கிளறி இறக்கி வைக்கும். பின்னர் எடுத்து வைத்து பரிமாறவும்.
