உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பயங்கரவாதிக்கு கட்டளையிட்டவர் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நடத்தியது மற்றும் அதற்குத் தலைமை ஏற்றிருந்த தீவிரவாதி சஹ்ரான் ஹாஷிமிற்கு கட்டளைகளைப் பிறப்பித்தவர் அபூ என்று அழைக்கப்படும் நபர் என்பது தெரியவந்துள்ளது. புலனாய்வுப் பிரிவு மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவின் விசாரணைகளில் இந்த நபர் பற்றிய தகவல்கள் அம்பலமாகியிருக்கின்றன. கல்கிஸையில் உள்ள அடுக்குமாடி ஹோட்டலில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் சஹ்ரான் உள்ளிட்ட தீவிரவாதக் குழு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் கொடிக்கு முன்பாக நின்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காணொளியை ரில்வான் என்பவரே பதிவுசெய்திருந்தார். இந்நிலையில் ரில்வான் அந்த காணொளியை இந்தியாவிற்கு அனுப்பிவைத்திருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *