மணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது – போலீசார் விசாரணை

மோகனூர்:

மோகனூர் போலீசார் மணப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பள்ளி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 46), ராஜகணபதி (26), தேவேந்திரன் (28), ராஜ்குமார் (24) மற்றும் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த முரளிதரன் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *