கீரனூர்:
கீரனூர் கள்ளத்தெருவைச் சேர்ந்தவர் சத்யா (வயது 45). இவர் நேற்று முன்தினம் மதியம் கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது, மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் இறங்கியதால் ஒருவன் பிடிபட்டான். மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான். இதனையடுத்து அவனை பிடித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், திருச்சி தீரன் நகரைச் சேர்ந்த நந்தகுமார் (வயது 44) என தெரியவந்தது. இதனைடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய மற்றொருவனை தேடி வருகின்றனர்.