அகத்திக்கீரை பொரியல் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

அகத்திக்கீரை – 1 கட்டு
தேங்காய் துருவல் – விருப்பத்திற்கேற்ப
சின்ன வெங்காயம் – 50 கிராம்
உப்பு – தேவையான அளவு
வரமிளகாய் – 3
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயத்தை சின்னதாக நறுக்கி கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையை சேர்த்து கிளறவும். மிதமான தீயில் வைத்து வேக விடவும்.

அதில் உப்பு சேர்க்கவும்.

கீரை முக்கால் பாகம் வெந்ததும் தேங்காய் துருவல் சேர்க்கவும்

நன்றாக கிளறி அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்.

சத்தான அகத்திக்கீரை பொரியல் தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *